கச்சா எண்ணெய் விலை குறைந்தால் மட்டுமே பெட்ரோல் விலை குறையும் - மத்திய பெட்ரோலியம் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி!
உயர்ந்து வரும் பெட்ரோல்-டீசல் விலையை கட்டுக்குள் வைக்க நினைக்கும் மத்திய அரசு அதற்காக சர்வதேச கச்சா எண்ணைய் நிறுவனங்களுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 85 டாலரை கடந்துள்ளதால் உள்நாட்டில் பெட்ரோல் டீசலின் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது.
85 சதவிகித கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதால், விலையை குறைப்பதும் இயலாத காரியமாக உள்ளது. இந்த நிலையில் சர்வதேச கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களிடம் பேசி வரும் மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கச்சா எண்ணைய் விலை பேரலுக்கு 70 டாலருக்கு அதிகமாக இருந்தால் அதை வாங்குவதை உலக நாடுகள் நிறுத்தும் என கூறியுள்ளார்.
மின்சார கார்களுக்கு மக்கள் மாறிவரும் நிலையில், பெட்ரோலியத்தின் தேவை குறைந்து கச்சா உற்பத்தி நாடுகள் வருமானம் இழக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments